அவுஸ்திரேலியாவுக்கு வெளியில்

அவுஸ்திரேலியா தனது எல்லைப்பாதுகாப்பு வல்லமையைப் பலப்படுத்தியுள்ளது. படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்க எத்தனிக்கும் எவராயினும் கண்டுபிடிக்கப்பட்டு, வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவர்.

அவுஸ்திரேலியாவின் எல்லைகள் சட்டவிரோத கடல்வழி குடியேற்றத்திற்கு மூடப்பட்டுள்ளன   

சட்டவிரோத படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்க எத்தனிக்கும் எவராயினும் வழிமறிக்கப்படுவதுடன் தாம் புறப்பட்டு வந்த நாட்டுக்கு அல்லது அவர்களது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள். அல்லது வேறொரு நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா வரும் எவரும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்

அவுஸ்திரேலிய எல்லைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும், ஆட்கடத்தலை நிறுத்துவதற்காகவும், மக்கள் கடல் ஊடாக உயிரைப் பணயம் வைத்து படகுப் பயணங்களை மேற்கொள்வதைத் தடுப்பதற்காகவும், அவுஸ்திரேலியாவின் கடுமையான எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆட்கடத்தல்காரர்களின் பொய்களை நம்பாதீர்கள்

ஆட்கடத்தல்காரர்கள் மக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, படகுவழி சென்று அவுஸ்திரேலியாவில் குடியேற முடியும் என்ற பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். ஆனால் அவர்களது பொய்களை நம்பாதீர்கள். சட்டவிரோத படகுப் பயணத்திற்காக பணம் செலுத்தும் எவரும் தாம் நினைத்த இடத்தை வந்தடைய முடியாது என்பதே உண்மையாகும்.

ஆட்கடத்தல்காரர்களுக்கு உங்களது பாதுகாப்பைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ அக்கறையில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் உங்கள் பணம் மட்டுமே.

பாதுகாப்பாக மற்றும் சட்டரீதியாக பயணம் செய்யுங்கள்

அவுஸ்திரேலியாவிற்குள் வருவதற்கு ஒரேயொரு வழி மாத்திரமே உள்ளது. அவுஸ்திரேலிய விசாவுடன் வருவதே அந்த வழியாகும்.

பாதுகாப்பாகவும் சட்டரீதியாகவும் அவுஸ்திரேலியா வருவதற்கான வழிகள் தொடர்பில் மேலதிகமாக அறிந்துகொள்ள என்ற உள்துறை அமைச்சின் இணையத்தளத்திற்குச் செல்லுங்கள். .

சட்டவிரோத புலம்பெயர்வுக்கு அவுஸ்திரேலியாவின் எல்லைகள்  மூடியபடியே இருக்கும்

நான் மேஜர் ஜெனரல் கிரெயிக் புரினி ஆவேன். அவுஸ்திரேலியாவின் எல்லைகள் பாதுகாப்பு நடவடிக்கைக்கான புதிய கட்டளை அதிகாரி என்ற வகையில், படகு வழியாக அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்க கருதும் ஒருவருக்கான ஒரு சாதாரண செய்தி ஒன்று என்னிடம் உண்டு. எனது அதிகாரத்தின்கீழ், சட்டவிரோத புலப்பெயர்வுக்கு அவுஸ்திரேலியாவின் எல்லைகள் மூடியபடியே இருக்கும். அவுஸ்திரேலியாவுக்கு ஒரு சட்டவிரோத படகுப்பயணத்திற்கு நீங்கள் எத்தனித்தால், நீங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, நீங்கள் புறப்பட்டு வந்த உங்களது நாட்டுக்கு அல்லது உங்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவீர்கள். அவுஸ்திரேலியா தனது கரையோரங்களைப் பாதுகாப்பது மற்றும் கடலில் இறப்புக்களைத் தடுப்பது குறித்து கடுமையாக இருக்கிறது. இது மாற்றமடையாது. வருடத்தின் ஒவ்வொரு நாட்களும் அவுஸ்திரேலியாவின் கரையோரங்கள் கண்காணிக்கப்படுகிறது, ரோந்துசெல்லப்படுகிறது மற்றும் பாதுகாக்கப்படுகிறது. அத்துடன் எங்கள் கரையோரப் பாதுகாப்பு அரண்கள் முன்னரை விடவும் உறுதியாக இருக்கின்றன.

ஆஸ்திரேலிய எல்லைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

ஆஸ்திரேலிய எல்லைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

ஆஸ்திரேலிய அரசு Operation Sovereign Borders என்ற எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பித்த இந்த 5 ஆண்டுகளில், நாம் வெற்றிகரமாக படகுகளை நிறுத்தியுள்ளதுடன் ஆட்கடத்தல் நடடிவக்கை மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எழுந்த அச்சுறுத்தல்களையும் அடக்கியிருக்கிறோம்.

ஆஸ்திரேலிய அதிகாரிகள் 33 படகுகளை இடைமறித்து அதிலிருந்த 827 பேரை தாம் வந்த இடத்திற்கே திருப்பியனுப்பியது மட்டுமல்லாது எமது பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயற்பட்டதன்மூலம் 70 ஆட்கடத்தல் பயணங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரேயே அவற்றை தடுத்திருக்கிறோம்.

கடல்வழி ஆட்கடத்தல் செயற்பாடானது ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பிற்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலான ஒன்றாகவே காணப்படுகின்றது.

அண்மையில் வியட்நாமிலிருந்து ஆட்கடத்தல் படகு ஒன்று வந்திருந்தமையானது இந்த அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுகிறது என்பதற்கான சிறந்த நினைவூட்டல் ஆகும்.

இப்படகில் வந்தவர்கள் விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டார்கள். ஆஸ்திரேலியாவில் எவரும் குடியமர்த்தப்படவில்லை.

இப்படகுப்பயணம் தோல்வியடைந்திருந்தாலும் ஆஸ்திரேலியாவை இந்தப்படகு வந்தடைந்தமையை தமது சந்தைப்படுத்தல் யுக்தியாக பயன்படுத்தும் ஆட்கடத்தல்காரர்கள் ஏனையவர்களையும் படகுப்பயணத்திற்கு இணங்கவைக்க முற்படுகின்றனர்.

குற்றவாளிகளான ஆட்கடத்தல்காரர்கள் சொல்வதைக் கேட்க வேண்டாம்.

கூடுதல் கடல்வழி மற்றும் வான்வழி கண்காணிப்பு வளங்களின் மூலம் இந்த அச்சுறுத்தலை முறியடிக்க ஆஸ்திரேலியா உறுதிபூண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுமூலம் வர முற்பட்டால் நீங்கள் நிறுத்தப்படுவீர்கள்.

எமது எல்லைப் பாதுகாப்பு கொள்கைகள் மாறவில்லை, மாற்றப்படவும் மாட்டாது.

எமது நாட்டின் இறைமை மற்றும் பாதுகாப்பை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

பிராந்திய செயலாக்க மையங்கள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் அத்துடன் பிராந்திய செயலாக்க மையங்களுக்கு அனுப்பப்படும் எவரும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படமாட்டார்கள்.

ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை வலுவூட்டப்பட்டுள்ளமையானது ஒரு உறுதியான செய்தியை ஆட்கடத்தல்காரர்களுக்கும் அவர்களது சேவையை நாடுபவர்களுக்கும் சொல்கிறது. எமது எல்லைகளைப் பாதுகாப்பது, ஆட்கடத்தல் நடவடிக்கையை எதிர்ப்பது மற்றும் கடலில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பது என்பதில் ஆஸ்திரேலிய அரசு முன்னெப்போதும் இல்லாதளவு உறுதிப்பாட்டுடன் உள்ளது.

படகைத் திருப்பி அனுப்பும் அவுஸ்திரேலியாவின் கொள்கை மாறாது

சட்டவிரோதமாக படகுமூலம் ஆஸ்திரேலியாவுக்குப் பயணிக்க எத்தனிக்கும் எந்த ஒரு நபரும், கண்டுபிடிக்கப்பட்டு, இடை மறிக்கப்படுவதுடன், ஆஸ்திரேலிய கடற்பரப்பிலிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படுவார். இந்த விதிகள் எல்லோருக்கும் பொருந்தும்; விதிவிலக்குகள் கிடையாது.